யூங்கிய நிழல்

இன்று

Banuvasan
Little world of carnivas

--

கொக்ரகோ கோ — அந்த depressed and insomniac சேவல் கத்தியது. அதிகாலை மணி நான்கு இருக்கும். தினமும் அதன் சத்தம் கேட்டு அவன் புரண்டு படுத்து மீண்டும் உறங்கி விடுவேன். ஆனால் இன்று உறக்கம் வரவில்லை.

நேற்று சாயங்காலம் நடந்த சம்பவங்கள் அப்படி. தன் மேலேயே வெறுப்பு வந்தது. முகம் கழுவிவிட்டு இம்மாதிரி சமயங்களில் செய்வது போல் Journal செய்ய ஆரம்பித்தான். முப்பத்தைந்து வயது வரை ஒழுக்கமாகத்தானே இருந்தேன், திடீரென்று என்ன ஆனது என்று யோசிக்க ஆரம்பித்தான். கூடவே கடந்த ஆறு மாதங்களில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன.

நேற்று

வெள்ளிக்கிழமை. அதுவும் Long weekendக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை. லேப்டாப்பை சரியான முறையில் பையில் வைத்து, பேனாக்களையும் மார்க்கர்களையும் அவைகளின் இடங்களில் வைத்து, மானிடர்களை நேராக திருப்பி, நாற்காலியை சரியாக மேஜையின் கீழே நகர்த்தி, மற்றும் வழக்கமான "ஆஃபீஸிலிருந்து கிளம்பும் முன் செய்யும் வேலைகளை" செய்துவிட்டு கிளம்பினேன்.

அது ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின் ஒன்பதாம் மாடி. மொத்த கட்டிடத்தையும் நான் வேலை செய்யும் நிறுவனம் குத்தகை எடுத்துள்ளது. யூ.எஸ் ஸை தலைமையாக கொண்ட ஒரு வங்கி. இந்தியாவில் Captive IT, ITES, BPO, KPO செண்ட்டர்களை கொண்டது. பத்து வருடங்களாக அடுத்த வருடம் “High End” வேலை வரும். அதுவரை maintenance வேலை செய்வோம் என்று ஓட்டிக்கொண்டிருக்கிறோம். நான் ஒரு Risk Analyst. எங்கள் வங்கி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் பல நாடுகளின் regulations க்கு உட்பட்டவையா என்று பரிசீலனை செய்யும் வேலை. தலைமை அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு நாங்கள் ஒரு "CYA” (Cover your a**) strategy. அவ்வளவுதான். அடுத்த scam வரும்போது (It is always a question of when, not if) இங்கே தலைகளை உருட்டி விட வசதியாக.

எங்கள் ஃப்ளோரே காலி. Pantry-யில் கப்களை கழுவும் சத்தம் தவிர வெறு எந்த சத்தமும் வரவில்லை. Internal Audit team உட்காரும் பகுதியை தாண்டி looவிற்கு சென்றேன். (மற்றொரு அலுவலகத்திலிருந்து கிளம்பும் முன் செய்யும் வழக்கமான காரியும்). அந்த பகுதியின் கடைசி டெஸ்க்கில் ஒட்டப்பட்டிருந்த Smiley என்னைப்பார்த்து சிரித்தது. அது எனக்காகத்தான் ஒட்டப்பட்டுள்ளதோ என்று யோசித்தேன். அந்த நினைப்பே அடி வயிற்றிலும் அதன் கீழேயும் என்னவோ செய்தன. பல வருடங்களாக இதைப்போன்ற feelings வந்ததில்லை. என்னையரியாமல் புன்னகைத்தேன்.

அவள் 15 நிமிடங்கள் முன்னதாகவே கிளம்பிவிட்டாள். இந்நேரம் அலுவலக பார்க்கிங்கை தாண்டியிருப்பாள். Starbucks-இல் சிறிது நேரம் இருந்துவிட்டு அடுத்து எங்கே செல்லலாம் என்று முடிவு செய்வோம். “It is going to be a long evening” என்ற நினைப்பில் விசில் அடித்துக்கொண்டே loo-விற்குள் சென்றேன். Groin area யில் அதீத ரத்தம் சென்று என்னவோ செய்ய (லாங் ஈவெனிங் பற்றிய யோசனைகள் அப்படி), Urinals-ஐ பயன்படுத்தாமல் டாய்லெட்டின் உள்ளே சென்றேன். இல்லையென்றால் கண்ட்ரோல் செய்ய இயலாமல் பல இடங்களில் தெளித்து விட வாய்ப்புகள் உண்டு.

ஃபோன் வைப்ரேட் செய்தது. டிஸ்கணெக்ட் செய்து stored messages ஒன்றை அனுப்பினேன் - "In a meeting. Will call later. Call again if super-urgent". அதில் கடைசி பகுதியை அழித்திருக்க வேண்டும். இல்லையென்றால் 90% முறை மீண்டும் கால் வரும்.

முக்கியமாக, அழைப்பவர் உங்கள் மனைவியாக இருந்தால்.

(தொடரும்)

--

--