அந்த ஐவர்

Banuvasan
Little world of carnivas
1 min readJul 3, 2020

--

இடம்: தமிழ்நாட்டிலில்லாத ஒரு மண்டல பொறியியல் கல்லூரியின் அருகில் உள்ள உணவகம்.

அவர்கள் ஐவரும் பரஸ்பர ஹை-ஃபைவ் மற்றும் அணைத்தலுக்குப்பிறகு உணவகத்திற்குள் சென்றனர். ஏறத்தாழ பத்து வருடங்கள் கழித்து அனைவரும் ஒரே நேரத்தில் கூடியுள்ளனர். கல்லூரி காலத்திலும் அதன் பிறகும் ஒற்ற நண்பர்கள். ஒவ்வொருவருக்கும் வேறு மொழி பேசும் பல நண்பர்கள் இருந்தாலும் தமிழ் பேசும் இந்த க்ரூப் தான் ஃபேவிரட்.

Indicative picture, of course.

'மச்சி, உள்ள போலாம்டா' என்றான் சுதீஷ். அதாவது, புகை பிடிக்கும் பகுதிக்கு. அனைவருக்கும் பழக்கம் இருந்திருந்தாலும், அவன் மட்டும் தான் இன்னும் தொடர்கிறான். 'டேய், லேசா ஹை-BP வந்ததும் விடப்போறேன்னு சொன்னயேடா? அட் லீஸ்ட் இன்னைக்கு வேண்டாம் விடு' என்றான் சார்த்தக். உள்ளே எட்டி பார்த்து விட்டு, 'நம்ம டேபிள்ள யாரோ இருக்காங்க போல' என்றான் கமல். அதற்குள் ஒரு வெய்ட்டர் வந்து வேறு டேபிளை காட்டி, 'ஹியர் சர்' என்றதும் அவர் காட்டிய இடத்திலேயே அமர்ந்து விட்டனர். 'டேய் அந்த ஆள பாத்தா ச்சோட்டு மாதிரியில்ல?' என்றான் கண்ணன். ஒரு காலத்தில் அவன்தான் அங்கேயே பழி கிடப்பவன். 'ஆமாடா, அவனேதான், இப்போ பெரிய மேனேஜர் ஆயிட்டான் போல' என்றான் விஷ்ணு.

(தொடரும்)

--

--